புதுடில்லியில் மோசமான நிலைமையில் உள்ள காற்றின் தரம்...!!!
இந்திய தலைநகர் புது டில்லியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் காற்றின் தரம் வெகுவாக மோசமடைந்துள்ளது.
இதனால் பொது மக்களுக்கு சுவாச பிரச்சனை உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த நிலைமையைச் சமாளிக்க இன்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர பெரும்பாலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கட்டாய முகக் கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற வணிக நடவடிக்கைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்கலாம்.
அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது.
லாகூரில் காற்றின் தரம் சற்று மேம்பட்டாலும் அது ஆரோக்கியமற்றதாகவே உள்ளது.
எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow us on : click here