AI தொழில்நுட்பத்தால் இனி ஷாப்பிங் செய்வது மிக எளிது!!
சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) சிங்கப்பூரில் ஷாப்பிங்கை இன்னும் எளிதாக்க உள்ளது.
கடைக்காரர்களுக்கு ஆள் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க இது பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AI தேடல் உதவியாளர் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருவரின் வசதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதை வாங்குவது என்று பரிந்துரைக்கும்.
ஷாப்பிங் செய்பவர்களுக்கு எளிதாக பொருட்களை தேர்ந்தெடுக்கவும், விற்பனையாளர்கள் பொருட்களை சிறப்பாக விற்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிதும் உதவி புரியும் வகையில் அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, கடையின் எந்தப் பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது என்பதைக் கவனித்து அந்த பகுதிகளில் பொருட்களை வைத்து விற்பதற்கும் உதவியாக இருக்கும்.
நியூயார்க்கில் நடைபெறும் சில்லறை விற்பனையின் பிக் ஷோ நிகழ்ச்சி தற்போது சிங்கப்பூர் வந்துள்ளது.
மூன்று நாள் நிகழ்வுக்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் சில்லறை விற்பனை சங்கமும் இணைந்து நிதியுதவி செய்யவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here