சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படும் AI வழிகாட்டி புத்தகம்!!

சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படும் AI வழிகாட்டி புத்தகம்!!

சிங்கப்பூர்: வளரும் இளைய தலைமுறையினரின் அறிவும் ஆற்றலும் வளர்ந்து வருவது போல தொழில்நுட்பங்களும் அதற்கேற்றார்போல் வளர்ந்து வருகின்றன. இது மனிதனைப் போன்று அல்லது மனிதனை விட அதிக சிந்திக்கும் திறன் கொண்ட கணினி பொறிகளை உருவாக்குவதே இதன் நோக்கம். அதனால் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிங்கப்பூரில் AI வழிகாட்டி புத்தகம் ஒன்று இந்த மாதம் வெளியிடப்பட உள்ளது .

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு குறித்த வழிகாட்டி புத்தகம் இந்த மாதம் வெளியிடப்படும். வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுத் துறையைப் பாதுகாப்பாகவும் புதுமையாகவும் வைத்திருக்க இந்த வழிகாட்டி புத்தகம் உதவுகிறது. மேலும் தகவல் கசிவு மற்றும் தவறான தகவல் பரவுதல் போன்ற அபாயங்களைத் தடுக்க வழிகாட்டி புத்தகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சிறப்பு ஆர்வலர் குழு அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்குழு தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவு மற்றும் யோசனைகளை பகிர்ந்து கொள்ளும்.

சிங்கப்பூரின் மின்னிலக்க உள்கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய பங்கை அளித்து ஓர் அங்கமாக மாறி வருவதாக தொடர்பு ,தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தி வருவதால் அது தொடர்பான கலந்துரையாடல்கள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார். மேலும் தொழில்நுட்பத்தின் பலன்களை அதிகரிக்க பொதுமக்கள் நம்பிக்கை கண்ணோட்டத்தில் இருப்பது அவசியம் என்று டாக்டர் ஜனில் கூறினார்.