எங்களது பணி நீக்கம் நியாயமற்றது என வாதிடும் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்…!!!!

எங்களது பணி நீக்கம் நியாயமற்றது என வாதிடும் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்...!!!!

சிங்கப்பூர்: சிங்போஸ்ட் அதன் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 3 மூத்த நிர்வாகிகளை பணி நீக்கம் செய்துள்ளது.

நிறுவன ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது தெரியவந்தது.

ஒழுங்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்போஸ்ட் அதன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.வின்சண்ட் பாங்,குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி திரு.வின்சண்ட் யிக் மற்றும் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தின் தலைமை நிர்வாகி திரு.லி யூ ஆகியோரை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஊழியர் நிறுவனத்தின் சர்வதேச இணைய வணிகத்தைப் பற்றி புகார் செய்தார்.

ஒரு ஒப்பந்தத்தின் கீழ், சர்வதேச பார்சல்களில் சில விநியோக முறைகள் சொந்தமாகச் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒருவருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின் கீழ் அபதாரத்தைத் தவிர்ப்பதற்காக உரிய ஆவணங்களின்றி சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் விதிகளை மீறியதாக சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி இது நியாயமற்ற நடவடிக்கை என்றும் இதை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.

“பல வருட சேவைக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். எந்த அடிப்படையும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். அது தீர்மானிக்கப்பட்ட செயல்முறையும் நியாயமற்றது” என்று கூறினர்.