மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!!

மீண்டும்...மீண்டுமா...!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை...!!!

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பதிலடி வரிகளைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் ஒரு நிலையற்ற சூழலில் உள்ளது.

தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 3,118 (S$4,193) டாலரை ஐ எட்டியுள்ளது.

அது 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்விற்கு நிலையற்ற வர்த்தக சூழல் மட்டும் காரணமில்லை.

இதற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகளும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வர்த்தகப் போர் வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

கடந்த மாதம், தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 (S$4,000) டாலரை ஐத் தாண்டியது.

மேலும் பாங்க் ஆஃப் அமெரிக்காவின் உலோக ஆராய்ச்சித் தலைவர் மைக்கேல் விட்மர், கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அடுத்த 18 மாதங்களில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,500 ஆக உயரும் என்று கணித்துள்ளார்.

பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகிறார்கள்.