மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…

மீண்டும்...மீண்டுமா....! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் கிழக்கு கடற்பரப்பு இரட்டை சூறாவளியை சந்திக்கவுள்ளது.

கடந்த சில தினங்களாகவே சீனாவில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மேலும் பலத்த புயல் மற்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹைனான் பகுதியில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாட்டை தாக்கும் முதல் வெப்பமண்டல சூறாவளி இதுவாகும்.

கெமி புயல் இந்த வாரம் வடக்கு தைவானைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மணிக்கு சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வாரம் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் கெமி புயல் தாக்கும் வாய்ப்புள்ளது என தைவானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷாங்க்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக வெள்ளிக்கிழமை (19) இரவு பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்ததில் 30 பேரை காணவில்லை.

இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.