Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் 12 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய இணைய வங்கி சேவை!

சிங்கப்பூரில் நேற்று 29-ஆம் தேதி DBS ibanking சேவையில் காலை தடங்கல் ஏற்பட்டது. இதனால் பயனீட்டாளர்கள் DBS Facebook பக்கத்தில் அவர்களுடைய ஆதங்கத்தை பகிர்ந்தனர்.

Downtector.com பக்கத்தில் இந்த சேவைத் தடங்கல் தொடர்பாக 300 க்கும் அதிகமான புகார்கள் பெற பட்டதாக தெரிவித்தது.

பயனீட்டாளர்களிடம் சேவை வழக்க நிலைக்கு மீண்டும் திரும்பியபின் அதனைப் பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக் கொண்டது.

ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வங்கி தெரிவித்தது.

பயனீட்டாளர்கள் அவர்களுடைய வங்கிச் சேமிப்பு அட்டையைப் பயன்படுத்தலாம் என்றும் நேற்று வங்கி கூறியது.

அவர்களுடைய பணம் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தது.

12 மணி நேரத்துக்கு பிறகு,DBS இணையச் சேவைகளில் ஏற்பட்ட தடங்கல் தீர்க்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியது.

இதையடுத்து மேலும் 2 மணி நேரத்துக்கு DBS, POSB கிளைகள் அதன் திறந்து இருக்கும் நேரத்தை நீடித்து உள்ளது.