இரண்டாவது முறையாக கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்!!எங்கு கண்டறியப்பட்டது?

ஹாங்காங்கில் உள்ள Lau Fau Shan என்ற பன்றிப் பண்ணையிலிருந்து 62 பன்றிகளின் மாதிரிகளை சோதனை செய்ததில், அங்கு உள்ள பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுமார் 1900 பன்றிகளை அழிக்குமாறு ஹாங்காங் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஹாங்காங்கில் இம்மாதம் மட்டும் இரண்டாவது முறையாக Lau Fau Shan பன்றி பண்ணையில் உள்ள பன்றிகளில் இந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும் இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வைரசால் உள்ளூர் இறைச்சிக் கூடங்களின் செயல்பாடு பாதிக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து பன்றி பண்ணைகளையும் முற்றிலுமாக சுத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர்.