Singapore News in Tamil

சிங்கப்பூரில் Instagram பயனீட்டாளர்களுக்கு பாதிப்பு!

சிங்கப்பூரில் இன்று (மே-22) காலை 5.45 மணியிலிருந்து Instagram செயலியைப் பயன்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்த இயலவில்லை என்று Downdetector தெரிவித்தது.

Downdetector தளத்தில் கிட்டத்தட்ட 3,186 புகார்கள் பதிவாகியது.காலை 6.15 மணியிலிருந்து 8 மணி வரை செயலியைப் பயன்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டதாக புகார்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 180,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் செயலியைப் பயன்படுத்துவதில் சிரமம் பட்டதாக Downdetector தெரிவித்தது.

அவர்களில் 24,000 பயனீட்டாளர்கள் கனடாவும்,56,000 பயனீட்டாளர்கள் பிரிட்டனும் அடங்குவர்.

செயலியை இயல்புநிலைக்கு கொண்டுவர முயல்வதாக Istagram செயலியை நிர்வகிக்கும் Meta நிறுவனம் கூறியது.

அந்நிறுவனம் சேவைத் தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.