அண்மையில் கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட. நோயாளிகள் இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கோவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழு கூறியது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களும்,எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களும் தடுப்பூசிகளை விடாமல் போட்டுக் கொள்ளும்படி குழு கேட்டுக் கொண்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் கணிசமானவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பைப் பெறும் அளவிற்கு கூட தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசிகளை அவர்கள் கடைசி Booster தடுப்பூசியைப் போட்ட கொண்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச பாதுகாப்பு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் முடிந்தவரை விரைவாக போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.