சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு அறிவுரை!!
சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் மற்றும் செம்பவாங் கடற்கரைகளில் கடல் நீரில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் யாரும் கடலில் நீந்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாக்டீரியாவால் இரைப்பை குடல் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் இரண்டு இடங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.