குழந்தை பராமரிப்பு விடுப்பு நாட்களை அதிகரிப்பது குறித்து ஆலோசனை…!!

குழந்தை பராமரிப்பு விடுப்பு நாட்களை அதிகரிப்பது குறித்து ஆலோசனை...!!

சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வீட்டில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசு பெற்றோர்களுக்கு கை கொடுக்கும் விதமாக விடுமுறை நாட்களை அதிகரிக்க வழி செய்கிறது.

வேலை மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள பெற்றோர்கள் போராடுவதால் காலப்போக்கில் பெற்றோர் விடுப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரியில் தந்தைகளுக்கான சம்பளத்துடன் கூடிய விடுப்பு இரண்டு வாரங்களில் இருந்து நான்கு வாரங்களாக அதிகரிக்கப்பட்டது குறித்து பேசினார்.

குழந்தையின் முதல் இரண்டு ஆண்டுகளில் வருடத்திற்கு 6 முதல் 12 நாட்கள் ஊதியம் இல்லாத குழந்தை பராமரிப்பு விடுப்பு கொடுக்கப்பட்டது என்று குமாரி இந்திராணி ராஜா கூறினார்.

குழந்தை பராமரிப்பு விடுப்பு தற்போது வருடத்திற்கு 6 நாட்கள் ஆகும். அதை அதிகரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதிக பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

டிசம்பர் 2024 முதல் நடைமுறைக்கு முத்தரப்பு வழிகாட்டுதல்களின்படி, நீக்கு போக்கான பணி ஏற்பாடுகள் வரவுள்ளது .

இந்த ஏற்பாடு முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று அவர் கூறினார்.

மேலும் குமாரி இந்திராணி, பெற்றோரின் தேவைகளுக்கும், முதலாளிகளின் மனிதவளப் பிரச்சனைக்கும் இடையே சமநிலை காணப்பட வேண்டும் என்று கூறினார்.