சிங்கப்பூரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு!!

சிங்கப்பூரில் , அனைத்து துறைகளிலும் உள்ள தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பான NTUC ( தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ) தனது CTC மானியத்தின் வாயிலாக சுமார் 1500 தொழிலாளர்களுக்கு சராசரியாக 5.2% ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

CTC என்பது 2019 ஆம் ஆண்டு NTUC – யால் கொண்டுவரப்பட்ட தேசிய காங்கிரஸின் நிறுவன பயிற்சி குழு ஆகும்.இதன் மூலம் முடங்கப்பட்ட தொழில் வர்த்தகங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் இதன் மூலம் நிதிகள் திரட்டப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியையும் செய்து வருகிறது.

அதை தொடர்ந்து இந்த மானியத்திற்காக 71 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது.அந்நிறுவனங்களுக்கு 88 திட்டங்களையும் சுமார் S$ 10.6 மில்லியனையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.மேலும் இந்த மானியத்திற்கு விண்ணப்பித்த தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியில் 70% பெற இயலும்.அதுமட்டும் இன்றி CTC மூலம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தையும் பெற இயலும். மேலும் அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில் முறை மாற்றத்தை எதிர் கொள்ளும் தொழிலாளர்களுக்கு தேவையான ஊதிய உயர்வு வழங்கி அதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் முடியும்.இதன் அடிப்படையில் முதலாளிகள் மட்டும் இன்றி தொழிலாளர்களும் வெற்றி பெற இயலும்.

இத்தகைய மானியத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் NTUC இன் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.இத்தகைய மானியத்தில் பயனடைந்த நிறுவனத்தில் Leather solution னும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.