`தளபதி 69′ படத்தில் விஜய்யுடன் முதல்முறை இணைந்து நடிக்கவுள்ள நடிகை!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் புது புது அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது.

தளபதி விஜயின் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படம் கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசையமைப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது.

கடந்த சில நாட்களாக தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்து தகவல் வெளிவந்த வண்ணமே உள்ளன.

இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ பூஜா ஹெக்டெ,கௌதம் மேனன்,பாபி தியோல் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை பிரியாமணி இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யுடன் நடிகை பிரியாமணி இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.