இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!!

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா...!!!

தமிழ்,தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை இலியானா.ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த இலியானா போர்ச்சுகல் படங்களிலும் நடித்து வருகிறார். இலியானா தனது நீண்டகால காதலர் மைக்கேல் டோலனை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார்.

நடிகை இலியானா தெலுங்கு படங்களில் பல முன்னணி நடிகர்கள் பணியாற்றியுள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இலியானா, பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இலியானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹிந்திப் படமான தோ அவுர் தோ பியார் அமோக வரவேற்பைப் பெற்றது.இதற்கிடையில் போர்ச்சுகல் படங்களிலும் இலியானா நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 இல்,அவர் தனது கர்ப்பத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.அவர் திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்தபோது, ​​​​அவரது காதலர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

பின்னர் தனது காதலரான மைக்கேல் டோலனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். டோலன் தன்னுடைய கடுமையான காலங்களில் தனக்கு உதவியதாக இலியானா கூறினார்.

திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்த இலியானாவுக்கு 2023-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.கர்ப்பத்தை அறிவித்துவிட்டு காதலனையும் அறிமுகப்படுத்தினார். தற்போது அவர் தனது இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்துள்ளார்.

இலியானா தனது குழந்தை பிறந்ததை அறிவித்த பிறகு, அடுத்தடுத்த பதிவுகளில் தனது குழந்தையுடனான தனது உறவு குறித்து மனதை தொடும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இலியானா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும்,இலியானா தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மைக்கேல் டோலனை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயான இலியானா, தற்போது தனது இரண்டாவது குழந்தை குறித்து ரகசியமாக பதிவிட்டுள்ளார். இம்முறை இலியானா சூசகமான பதிவின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலியானா தனது பதிவில், பஃப் கார்ன் ஸ்நாக்ஸ் புகைப்படங்களை பதிவிட்டு, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு கர்ப்பமாக இருப்பதை நேரடியாக சொல்லாமல் ஏன் குழப்புகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.