நடிகர் டி.எஸ். பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் காலமானார்.
ஜூனியர் பாலையா என்று பலரால் அழைக்கப்பட்டார்.
இன்று , நவம்பர் 2 அதிகாலையில் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
1975 ல் வெளிவந்த ” மேல்நாட்டு மருமகள் ” திரைப்படத்தில் அறிமுகமாகி , நாற்பது வருடங்களாக நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அதுமட்டும் இன்றி கரகாட்டக்காரன் , அமராவதி, வின்னர் மற்றும் கும்கி , சாட்டை என பிரபல திரைப் படங்களில் துணை வேடங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியவர் இவர்.
நடிகர் அஜித் குமார் அவர்களின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை ” திரைப்படத்தில் நடித்திருந்தார் ஜூனியர் பாலையா அவர்கள். மேலும் ஒரு கானொலி பேட்டியில் நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பு திறமையையும், இயல்பான பண்பையும் கண்டு தான் வியந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இவர் பெரியத்திரையில் மட்டுமின்றி சித்தி , சின்னப்பாப்பா பெரியப்பாப்பா முதலிய வெள்ளித்திரை நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இயல்பான நடிப்பில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்த இவரின் மறைவு சினிமா துறைக்கு ஓர் இழப்பு என்பதில் ஆச்சிரியம் இல்லை.பிரபல இந்திய நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.மேலும் மறைந்த ஜூனியர் பாலையா அவர்களின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.