இத்தாலி நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள், சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்தின் சின்னமாக விளங்கும் பியாஸ்ஸா டெல் போபோலோ சதுக்கத்தில் உள்ள சிங்க நீரூற்றின் மீது பெயிண்ட் வீசினர்.
இச்சம்பவம் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.20க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.
ஆனால் இத்தாலி நாட்டில் மட்டும் சர்க்கஸில் விலங்குகள் பயன்படுத்தப்படுவதை இன்னும் தடை செய்யவில்லை.