சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை!! முறியடிக்கப்பட்ட கடத்தல்!!
சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்தனர். தனது காரில் 5 நாய்க்குட்டிகளையும் , 3 பூனைக்குட்டிகளையும் மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடம் முதல் முறையாக நடந்த சம்பவம் இது.
வீட்டுவிலங்குகள் அல்லது காட்டுவிலங்குகளை கடத்திய குற்றங்கள் 2023 -ஆம் ஆண்டு 30 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.இந்த சம்பவங்களை
தேசிய பூங்கா கழகம் மற்றும் குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் உள்ளிட்ட பிற அமைப்புகள் கண்டுபிடித்தன.
முதல் முறையாக குற்றம் செய்பவர்களுக்கு விலங்குகள், பறவைகள் சட்டத்தின்கீழ் $10000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்படலாம்,ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இவ்விரண்டுமே தீர்ப்பளிக்கப்படலாம்.
குறைந்தது 50 இடங்களில் தேசிய பூங்காக்கழகம், அதிரடி சோதனையை நடத்தினர். கிட்டத்தட்ட 180க்கும் அதிகமான வனவிலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.