சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!!
சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த இரண்டு வார விடுமுறைக் காலத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
இந்த சோதனையில் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியிருக்கும் திரைகள், ஒளிரும் அலங்கார விளக்குகள், முறையற்ற நம்பர் பிளேட்டுகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்ஸர் ஆகியவற்றை சட்டவிரோதமாக அவர்கள் பொருத்தியதாக நம்பப்படுகிறது.
மொத்தம் 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவ்வாறு பிடிபட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 165 க்கும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் சட்டவிரோதச் செயல்களை ஒழிப்பதும் அடங்கும் என்று கூறியது.
Follow us on : click here