சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! சிக்கிய 350,000 க்கும் அதிகமான E-சிகரெட்டுகள்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 350,000க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவற்றின் மதிப்பு சுமார் 6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது.
டெலிகிராம் செயலியில் இ-சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் செயல்படும் மிகப்பெரிய மின்-சிகரெட் விநியோக நெட்வொர்க்குகளில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த மாதம் (ஜூன் 2024) 14 முதல் 18ம் தேதி வரை உட்லண்ட்ஸ் லூப், உட்லண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க் போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதில் சில கிடங்குகளிலும் சில கூட்டுறவு நிறுவனங்களிலும் இ-சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆணையம் கூறியது.
இதில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 34 முதல் 52 வயதுடைய 4 பேர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.
அந்த நான்கு பேரில் இருவர் பெண்கள் என கூறப்படுகிறது
இந்த ஆண்டு ஜனவரி முதல், சிங்கப்பூரில் 18 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here