சிங்கப்பூரில் அதிரடி சோதனை……பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 329 பேரிடம் விசாரணை……

சிங்கப்பூரில் காவல்துறை நிலப்பிரிவு, வர்த்தக குற்ற புலனாய்வு சேர்ந்து சோதனை நடவடிக்கை நடத்தின. இந்த சோதனை நடவடிக்கை ஆகஸ்ட் 18 முதல் 31 ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் 329 பேரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.

சொத்து வாடகை மோசடி, இணைய வர்த்தக மோசடி, இணைய காதல் மோசடி, கள்ள பணத்தை நல்ல பணமாக மாற்றுவது போன்ற மோசடி சம்பவங்களில் தொடர்பில் உள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடியில் 9.4 மில்லியன் தொகை பறிபோகி உள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்ற சம்பவங்களை தவிர்க்க தங்களின் தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பதும்,போலி குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.