சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்ற அதிரடி சோதனை!!பிடிபட்ட பயணிகள்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு முன்னறிவிப்பின்றி பல்வேறு கரன்சி நோட்டுகளை கொண்டு வந்ததாக நம்பப்படும் பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் காவல்துறையுடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
கடந்த வாரம் சாங்கி விமான நிலையத்தின் 4 முனையங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
10,000க்கும் மேற்பட்ட பயணிகளை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது 18,000க்கும் மேற்பட்ட ஹேண்ட் லக்கேஜ் மற்றும் சூட்கேஸ்கள் சோதனை செய்யப்பட்டன.
முன்னறிவிப்பின்றி பல்வேறு நாடுகளில் இருந்து 30,000 முதல் 35,000 வெள்ளி வரையிலான பணத்தை எடுத்த வந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் இருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.
மற்றொருவர் வெளிநாட்டவர்.
அவர்கள் மூவரும் 31 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் 24,000 முதல் 109,000 வெள்ளி வரை அறிவிக்கப்படாத தொகையை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த நான்கு வெளிநாட்டுப் பயணிகள் என சில பயணிகள் பிடிபட்டுள்ளதாக தெரிகிறது.
இரண்டு பயணிகள் 140,000 வெள்ளிக்கு மேல் பல்வேறு கரன்சி நோட்டுகளை கொண்டு வந்ததற்காக அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கள்ளநோட்டு, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் பிற குற்றங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் எல்லை தாண்டிய பண அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.
பயணிகள் கொண்டு வரும் பணத்தின் அளவு 20,000 அல்லது அதற்கு சமமானதாக இருந்தால், 72 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் 50,000 வெள்ளி வரை அபராதமோ அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் குறிப்பிட்ட தொகை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படலாம்.
Follow us on : click here