ஏப்ரல் 10-ஆம் தேதி Ang mo kio,Hougang,Geyland,Toa Payoh ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு சோதனை நடவடிக்கையை தொடங்கியது.
இந்த சோதனை நடவடிக்கை நேற்று வரை நீடித்துள்ளது.
கிட்டத்தட்ட 234,000 வெள்ளி மதிப்பிலான போதைப் பொருட்கள் சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் எடை 2.8 கிலோகிராமுக்குமேல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மூன்று பேர் இந்த சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 161 போதைப்புழங்கிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர்.
சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் : 209 கிராம் Ice, 2876 கிராம் Heroin,1 கிராம் Ketamine, 5 Ecstasy மாத்திரைகள்,2 Erimin-5 மாத்திரைகள்,1 Methadone.
இது குறித்து விசாரணை தொடர்கிறது.