சாலை விதிமுறைகளை பின்பற்றாத 37 சைக்கிள் ஓட்டிகள் மீது நடவடிக்கை…!!!

சாலை விதிமுறைகளை பின்பற்றாத 37 சைக்கிள் ஓட்டிகள் மீது நடவடிக்கை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் இணைந்து நடத்திய சோதனையில் விதிகளை மீறிச் சென்ற 37 சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை கடந்த மாதம் செப்டம்பர் 28ம் தேதி முதல் இம்மாதம் அக்டோபர் 13ம் தேதி வரை நடத்தப்பட்டது.

சாலையில் குழுவாக சைக்கிள் ஓட்டுவதற்கு சில விதிமுறைகள் உண்டு.

ஆனால் சில சைக்கிள் ஓட்டிகள் வரம்பு மற்றும் விதிமுறைகளை மீறி சைக்கிள் ஓட்டுகின்றனர்.

சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஜனவரி 1, 2022 முதல் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலையில் விதிகளை மீறி சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 150 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சிவப்பு விளக்குகளில் நிறுத்தாமல் செல்வது மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் சைக்கிள் ஓட்டுதல் போன்ற விதி மீறல்களுக்கும் இந்த அபராதம் பொருந்தும்.

விதிகளை மீறிய சைக்கிளோடிகளுக்கு அவர்கள் பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

வாகனமோட்டிகள் முறையான சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வலியுறுத்தப்பட்டது.