நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!!

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு...!!!

டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட வரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் பன்னிரண்டு மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஆரெகன், நியூயார்க், மினசோட்டா மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் வரிகளை விதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர்.

அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்கள் வழக்கில் வாதிட்டன.

திரு.டிரம்ப் பல நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அவர் வரிகளை மேலும் உயர்த்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில்
உற்பத்தித் துறை மேம்பட்டு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று திரு. டிரம்ப் கூறுகிறார்.

Exit mobile version