மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு…!!

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் மது போதையில் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதன் பின்னரே அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 11.58 மணியளவில் நடந்தது.

டான் மது போதையில் தனது காரை பார்ட்லீ சாலையில் கிழக்கு நோக்கி ஓட்டிச் சென்றபோது, ​​இடதுபுறமாகச் சென்று சுவரில் மோதிய பின் வலதுபுறமாகச் சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக நம்பப்படுகிறது.

இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 28 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

விபத்து ஏற்படுத்தி விட்டு அவர் உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார்.

இச்சம்பவத்தின் காரணமாக டான் பீ சென் பெர்னர்ட் எனும் 53 வயதான போலீஸ் அதிகாரி மீது நீதிமன்றத்தில் நேற்று( செப்டம்பர் 12) 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வாகனம் ஓட்டும் போது அனுமதிக்கப்படும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக மதுபானம் உட்கொண்டது,கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது விதிக்கப்பட்டன.

டானுக்கு 15,000 வெள்ளி ஜாமீன் வழங்கப்பட்டது.

அவரது வழக்கு அடுத்த மாதம் (அக்டோபர் 2024) மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், டானுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, 2,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here ⬇️