அரூபாவில் அமெரிக்கா பெண்ணை கொலை செய்த குற்றவாளி…..கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்க்கப்பட்ட வழக்கு…..மனம் திருப்தி அடைந்த பெண்ணின் தாயார்…..

2005 ஆம் ஆண்டு அரூபாவுக்கு சென்ற 18 வயதுடைய அமெரிக்க பெண்மணி Natalee Holloway காணாமல் போன வழக்கில் சந்தேக நபரான 36 வயதுடைய Joran Van Der Sloot தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கரீபியன் தீவில் Holloway வை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதுவரை அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Holloway-ஐ கொன்றதற்காகவும், அவரது தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டிய குற்றத்திற்காகவும், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றம் மட்டுமல்லாமல் பெரு நாட்டைச் சேர்ந்த 21 வயதான Stephany Flores என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்த குற்றத்திற்காக 28 ஆண்டுகள் சிறை தண்டனையை பெருவில் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு சேர்த்து அமெரிக்க தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க உள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகள், Natalee-ன் வழக்கு தீர்க்கப்பட்டதை குறித்து தான் மிகவும் திருப்தி அடைந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.