பாதசாரிக்கு மரணம் விளைவிக்கும் வகையில் சைக்கிள் ஓட்டிய பெண்மீது குற்றச்சாட்டு…!!!

பாதசாரிக்கு மரணம் விளைவிக்கும் வகையில் சைக்கிள் ஓட்டிய பெண்மீது குற்றச்சாட்டு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பாதசாரி ஒருவரின் மரணத்திற்குக் காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

52 வயதான லி லான்யிங் பழுதடைந்த சைக்கிளை ஓட்டிச் சென்ற போது பாதசாரி ஒருவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, லீ மர்த்தபான் சாலை வழியாக பேலஸ்டியர் சாலையை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அவர் சைக்கிள் ஓட்டிச் சென்ற பாதை இருவழிச் சாலையாக இருந்தது.

வேகக் கட்டுப்பாட்டில் கோளாறு இருப்பதை அறிந்து சைக்கிளை ஓட்டியதாக லி மீது குற்றம் சாட்டப்பட்டது.

65 வயதான திருவாட்டி லீ லாய் குவென் சாலையை கடக்கும் போது லி லான்யிங் வேகமாக வந்து அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 28 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஆனது மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us on : click here 

Exit mobile version