பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!!

பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறையினரை தாக்க வந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் பூங்காவில் காவல்துறை அதிகாரிகளை கொல்ல முயற்சித்ததாக 42 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) சிங்கப்பூரரான டிமத்தி ஹெங் ஷெங்சியென் பொய் புகார் அளித்து அவர்களைப் பூங்காவிற்கு வரவழைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலை 6.30 மணியளவில் பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மேல் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​அந்த பெண்ணை காணவில்லை.

அருகில் இருந்த டிமத்தி தீ பாய்ச்சும் கருவியையும் வைத்திருந்தார்.

போலீசாரின் எச்சரிக்கையை புறக்கணித்த அவர், ஆபத்தான கருவியுடன் அதிகாரிகளை நோக்கி வந்ததாக கூறப்பட்டது.

இந்த நாள் ஆபத்தை உணர்ந்த 30 வயது அதிகாரி டிமத்தியைத் சுட்டார்.

டிமத்தி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் ஏற்கனவே ஒரு நபருக்கு கடுமையான காயங்கள் விளைவித்த வழக்கில் ஈடுபட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனால் நவம்பர் 9 ஆம் தேதி டிமத்தி மீது 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அவர் மீண்டும் இம்மாதம் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது.