”உலகில் கொடிய மிருகமொன்றுஉண்டு அதன் பெயர் பசி”….. என்ற வரிகளுக்கேற்ப…… இவ்வளவு மக்கள் பட்டினியால் வாட போகின்றனரா!! அதிர்ச்சியூட்டும் தகவல்!!

அடுத்த ஆண்டு மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் சுமார் 50 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

வன்முறை, விலைவாசி உயர்வு மற்றும் காலநிலை மாற்றமே இந்த நிலைக்கு காரணம் என்று ஐ.நா கூறுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவின் விலை அங்குள்ள மக்களின் ஊதியத்தை விட அதிகமாக இருப்பதால் பல மக்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் மக்கள் ஊட்டச்சத்து குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.

2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தில் விழும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில பகுதிகளில் நிலைமை மேலும் மோசம் அடையக் கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.