சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் 2 வெவ்வேறு வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகள்……உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்கள்…..

சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் வருடாந்திர பாதுகாப்பு,சுகாதார, சுற்றுப்புற விருது நிகழ்ச்சியை நடத்தியது.இந்நிகழ்ச்சியில் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat கலந்து கொண்டார்.

சென்ற வாரம் 2 வெவ்வேறு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வேலை இடங்களில் 2 கட்டுமான துறை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த 45 வயதுடைய ஊழியர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியது.அவர்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சகம் கூறியது.

மற்றுமொரு வேலையிடத்தில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்.41 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்த ஊழியர் வேலை செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

இந்த 2 வெவ்வேறு வேலையிட விபத்துகளைப் பற்றி நிகழ்ச்சியில் பேசினார்.

சென்ற வாரம் ஏற்பட்ட ஆணையத்தின் இந்த இரண்டு சம்பவங்கள் மனதிற்கு மிகுந்த வருத்தமளிப்பதாக கூறினார்.

இந்த ஆண்டில் ஆணையத்தின் வேலையிடங்களில் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 33. கடந்த ஆண்டில் 8 மாதங்களில் 22. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

வேலையிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசாங்கம்,முதலாளிகள்,தொழிற்சங்கங்கள் ஆகிய மூன்று தரப்பு கூட்டாண்மை மூலம் பணியிட பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலனை மேம்படுத்த கூட்டு முயற்சிகளுக்கு chee அழைப்பு விடுத்தார்.