நேற்று ஜோகூர் பாரு Eastern Dispersal Link நெடுஞ்சாலையில் பின்னிரவு 2 மணியளவில் சிங்கப்பூர் திரும்பும் வழியில் உள்ள மேம்பாலத்தில் விபத்து நடந்தது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் விழுந்து கிடைந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இந்த விபத்து குறித்து Sin Mah Bike Towing எனும் வாகனங்களை இழுத்து செல்லும் நிறுவனம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரும் போது விபத்தில் உயிரிழந்த நபரின் மூன்று நண்பர்கள் இருந்ததாக கூறினர்.
இறந்தவரின் குடும்பம் இந்தச் சம்பவம் குறித்து எச்சரித்து,விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
Sin Mah Bike Towing நிறுவனம் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில்,“ வணக்கம் நிர்வாகி, விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி, அனைவரும் சாலையில் பாதுகாப்பாக இருங்கள்´´ என்று பதிவிட்டிருந்தது.
அவருக்கு வயது 22.அவர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவரின் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.