
நேற்று(நவம்பர் 8) சிங்கப்பூர், ECP -யில் மினிபஸ் லாரி மற்றும் பைக் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
மெரினா கடற்கரையை நோக்கி ECP வழியாக சென்ற மினிபேருந்தில் பயணித்த பயணி திடீரென்று வெளியில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.பைக் ஓட்டி வந்த நபர் சுயநினைவின்றி சாலையில் கிடந்தார்.
இதனை அடுத்து அங்கு வந்த சில வாகன ஓட்டிகள் அவரை காப்பாற்ற முன்வந்துள்ளனர். Ms.Lynn Long – Yam (32) ஹோம் கேர் செவிலியர் , இரத்த வெள்ளத்தில் இருந்த அந்த நபருக்கு CPR – இருதய நுரையீறல் புத்துயிர் முறையை செய்து இருக்கிறார்.இருப்பினும் அவரிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.மேலும் அங்கு வந்த Mr.Liew மற்றும் அவரது மனைவியும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
பிறகு தலையில் இரத்த கசிவுடன் அந்த பைக் ஓட்டுநர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்க்கு அவர்கள் அளித்த பேட்டியில் கூறினர்.
இருப்பினும் மருத்துவர்களின் அறிக்கை படி , விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே இவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவித்தது.
மினிபஸ் -இல் இருந்து குதித்த பயணியை கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்து வருவதாகவும் விபத்தின் பின்னனி பற்றிய தகவல்களை சேகரிப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பைக் ஓட்டுநருக்கு வயது 27.