பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பொன்னமராவதி, பிப்.12-
பொன்னமராவதி அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டி – உலகம்பட்டி வளைவு சாலை அருகே வட்டமலை என்னும் இடத்தில் சாலையின் இடது புறமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாலை பணியாளர் வீரன் மகன் பழனி(57) என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் சக்கரங்கள் பழனியின் உடலின் மீது ஏறி பழனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரமாக உள்ள பள்ளத்து முட்புதரில் பாய்ந்தது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்கக்கப்பட்டுள்ளது. பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பழனி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கும் அவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த சாலை பணியாளர் பழனி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

நள்ளிரவில் நடந்த விபத்தின் காரணமாக போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.