சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 15) தஞ்சோங் பகாரில் ஒரு வேலைத் தளத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று (ஜூன் 15) இரண்டு மணியளவில் 1 Bernam Street – இல் நிகழ்ந்தது.
அங்கே கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்ததாக குடிமைத் தற்காப்பு படை கூறியது.
இடிபாடு நடந்து கொண்டிருக்கும் போது இரண்டாம் தளத்தில் உள்ள கான்கீரிட் சுவர் பிளவு ஏற்பட்டு பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓர் ஊழியர் காணாமல் போனார்.
அவரைத் தேடும் பணியில் பேரிடர் உதவி,மீட்புக் குழு பணியாளர்களும் ஈடுபட்டனர்.
அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தேடும் பணியில் 2 மோப்ப நாய்களும் கொண்டுவரப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை, காவல்துறை சேர்ந்த பல வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 20.அவரது உடல் சுமார் 6 மணிக்கு கட்டிட இடிபாடுகளுக்குகீழ் கண்டெடுக்கப்பட்டது.