சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக திட்டம் ஒன்று உள்ளது.
கிருமி பரவல் காரணமாக கடந்த மூவாண்டுகளாக இது போன்ற கற்றல் பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது கிருமி பரவல் ஒரு நிறைவை எட்டியுள்ளதால் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் மீண்டும் அந்த கற்றல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள சூழலில் வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை அது வழங்கும்.
அண்மையில் கற்றல் பயணத்தை மாணவர்கள் மேற்கொண்டனர்.
அவர்கள் பாலி, கோலாலம்பூர் போன்ற இடங்களுக்கு சென்றனர்.மீண்டும் அதனை தொடங்கியதற்காக ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாக கூறினர்.