Amazon நிறுவனம் ஏற்கனவே சென்ற ஜனவரி மாதம் 18,000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியது .
தற்போது மேலும் 9000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
சுமார் 1.5 மில்லியன் பேர் சென்ற டிசம்பர் மாதம் amazon நிறுவனத்தில் பணிப் புரிந்தனர்.
பலரும் கிருமி பரவல் காலக்கட்டத்தில் மின் வணிகத்தை அணுகினர்.
இதனால் amazon பெரிய வளர்ச்சி அடைந்தது.
பல்வேறு பிரிவுகளிடமிருந்து அளித்த தகவல்களைக் கொண்டு இன்னும் அதிகப்படியான வேலையாட்களை ஆட்குறைப்புச் செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Andy Jassy குறிப்பிட்டார்.
இதற்கு காரணமாக நிச்சயமற்ற எதிர்காலம், நிச்சயமற்ற பொருளியல் போன்றவற்றால் செலவுகளை சமாளிப்பதற்கும், ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.