Singapore News in Tamil

சிங்கப்பூர் Google ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் சுமார் 190 ஊழியர்கள் பணி நீக்கம்!

சிங்கப்பூரில் உள்ள Google-யின் ஆசிய – பசிபிக் தலைமையகத்தில் சுமார் 190 ஊழியர்களைப் பிப்ரவரி,16-ஆம் தேதி இரவு பணி நீக்கம் செய்துள்ளது. இதனை CNA -யிடம் பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) மூவர் கூறினர்.

இந்நிறுவனத்தின் ஊழியர்களில் 5.5 முதல் 6 விழுக்காட்டினர் வரை இவர்களில் அடங்குவர்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்வது கடினம். பணி நீக்கத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதைக் கண்டுபிடிப்பதும் எளிதல்ல என்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கூறினார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனம் வெளியிட இயலாது என்று Google நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Google நிறுவனம் Alphabet நிறுவனத்தின்கீழ் செயல்படுகிறது.

Alphabet நிறுவனம் சென்ற மாதம் 12,000 வேலைகளைக் குறைக்கபோவதாக அறிவித்து இருந்தது.

தற்போது google நிறுவனத்தின் பணி நீக்கம் இதன் ஒரு பகுதியே என்றும் Google நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூர் நிறுவனத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக Christopher Fong கூறினார். இவர் Google -யின் முன்னாள் ஊழியர்களுக்கான Xoogler அமைப்பை உருவாக்கியவர்.

Xoogler அமைப்பு பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.சிங்கப்பூரிலிருந்து 50 பேர் பதிவு செய்திருந்தனர்.

இதுவரை உலகளாவிய பணி நீக்க நடவடிக்கைக்கு முன்னர் அமைப்பில் 14,800 பேர் இருந்தனர். ஆனால்,தற்போது 26,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.