சிங்கப்பூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், பாலர் பள்ளியில் தனது பராமரிப்பில் இருந்த ஒரு வயது குழந்தையின் கன்னத்தில் பலமுறை அடித்து காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதியன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மார்ச் 20ஆம் தேதி அன்று அந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டு அந்த பெண் குறித்த விவரங்களை வெளியிட நீதிமன்றம் மறுத்தது.
மேலும் அந்தப் பெண்மணி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி அன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது S$8000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.