கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ள Mount Lewotobi Laki-Laki என்ற எரிமலை அண்மை வாரங்களாக பலமுறை வெடித்து சாம்பல் புகையை வெளியேற்றுகிறது.
இதனைத் தொடர்ந்து அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் புத்தாண்டு தினத்தன்று, எரிமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் உயரத்தில் சாம்பல் வெளியேறியதாகவும் அவர்கள் கூறினர்.
வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எரிமலை வெடித்ததை தொடர்ந்து Frans Seda விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.