இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!!

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!!

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மவுண்ட் லிவோடோபி லாக்கி லாக்கி எரிமலை பல முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

எரிமலை ஃபுளோரஸ் தீவில் உள்ளது.

இந்த எரிமலை வெடிப்பில் கிட்டத்தட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு (நவம்பர் 3) நடைபெற்ற திடீர் எரிமலை வெடிப்பால் பல குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றனர்.

அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

எரிமலையில் இருந்து வெளியேறிய எரிமலை குழம்புகளும்,பாறைகளும் சுமார் 4 கிலோமீட்டர் வரை கடந்து வீடுகளைச் சேதப்படுத்தின.

எரிமலை சாம்பல் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்துள்ளது.

இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.