இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை!!
இந்தோனேசியாவில் ஜனவரி 10ஆம் தேதி அன்று லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை புதிதாக வெடித்தது.
எரிமலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் சாம்பல் வெளியேறியது.
பல வாரங்களாக அதிகரித்து வந்த எரிமலை செயல்பாடுகளை தொடர்ந்து இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு காரணமாக அருகில் உள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்குவதற்கு இரண்டு தற்காலிக முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதுவரை அந்த முகாம்களில் சுமார் 5000 பேர் தங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாசக் கோளாறை தடுக்க பொதுமக்கள் முக கவசம் அணியுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.