இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!!
இந்தோனேசியாவின் மராபி எரிமலை, ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஜனவரி 14ஆம் தேதியன்று வெடித்தது.
எரிமலையில் இருந்து 1300 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த சாம்பல் புகையால் ஏற்படும் சுவாச நோயைத் தடுக்க பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் பலர் சுவாச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.