சிங்கப்பூரில் வயதானவர்களைத் தாக்கும் வைரஸ்!! புதிய தடுப்பூசி அறிமுகம்!!

சிங்கப்பூரில் வயதானவர்களைத் தாக்கும் வைரஸ்!! புதிய தடுப்பூசி அறிமுகம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்படுத்தி , மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஒரு வைரஸீக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான ஜிஎஸ்கே தயாரிப்பில் அரெக்ஸ்வி எனும் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அது சுவாச ஒத்திசைவு வைரஸ்(RSV) தொற்றுலிருந்து பாதுகாக்கும்.

சுகாதார அறிவியல் ஆணையத்தால்(HSA) மே 10-ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்டது.

வயதானவர்களை தாக்கும் சுவாச ஒத்திசைவு வைரஸால் (RSV) ஏற்படும் சுவாச கோளாறு பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் முதன்முதலில் வைரஸ்க்கு GSK தடுப்பூசி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள் குறிப்பாக சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை நாடுமாறும், தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.