Moderna நிறுவனம் புதிய ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் புற்றுநோய்,இதய நோய் முதலியவற்றுக்கு தடுப்பூசி தயாராகிவிடும் என்று கூறியது.
2030-ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்தது. அதற்கான ஆய்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியது.
இது குறித்து சில ஆய்வாளர்கள்,“ இதர நோய்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு எளிதாகி இருப்பதற்கு காரணம் கோவிட்-19 தடுப்பூசியே´´ என்றும் கூறுகின்றனர்.
எல்லா நோய்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பது ஐந்தே ஆண்டுகளில் சாத்தியமாகும் என Moderna தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் Paul Bourton கூறியதாக லண்டனின் Guardian ஏடு – இல் குறிப்பிட்டிருந்தது.