இரண்டு வயது குழந்தை கருப்பு நிற Rottweiler நாயால் கொடூரமாக தாக்கப்பட்டது.அந்த குழந்தை தன் தாயுடன் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது இச்சம்பவம் நேர்ந்தது என்று SCMP செய்தி தெரிவித்தது.
தாக்குதலின் போது அந்த Rottweiler நாயுடன், வெள்ளை நிற Labrador நாயும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை பலமுறை கொடூரமாக கடித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் அந்த குழந்தையின் விலா எலும்பு முறிந்ததாக அவர்கள் கூறினர்.
அந்த சம்பவம் சீனாவில் Chongzhou நகரில் நடந்தது. அங்கே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
அந்த இரண்டு நாய்களும் பிடிக்கப்பட்டது.நாய்களின் உரிமையாளரை தடுத்து வைத்துள்ளதாகவும் SCMP கூறியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து சீனாவின் பல நகரங்களில் உள்ள தெருநாய்களை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தத்தெடுக்கப்படாத நாய்கள் கொல்லப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.