ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!!

ரசிகர்களுக்கு விருந்து...!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!!

சூர்யாவின் உடன்பிறப்பான நடிகர் கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது “சர்தார் 2” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், முன்னணி இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் ஒரு முழுமையான காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வா வாத்தியாரே, சர்தார் 2 ஆகிய படங்களை முடித்த பிறகு, கைதி 2 மற்றும் டாணாக்காரன் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

மேலும், மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கார்த்தியை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும், கதை அவருக்குப் பிடித்து போனதால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கௌதம் மேனன் என்றால் சொல்லவா வேண்டும்.. காதல் கதையின் மன்னன். அவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் இளசுகளின் உள்ளத்தை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயமோகன் எழுதுகிறார் என்று கூறப்படுகிறது.

“காற்று வெளியிடை” என்ற முழு நீள காதல் படத்தில் நடித்த கார்த்தி, மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.