சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவருக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் Raffles Avenue இல் நடைபெற்ற 2XU Compression ஓட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

ஏப்ரல் 27 ஆம் தேதி (நேற்று) சுமார் 6. 25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.ஓட்டத்தில் பங்கேற்ற 23 வயதுடைய நபர் மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.அவரது இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்று காவல்துறை நம்புகிறது.

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓட்டப் பந்தயத்தில் 5,10,21.1 கிலோமீட்டர் என மூன்று விதமான ஓட்டப் பந்தயங்கள் நடைபெற்றன. அவற்றில் சுமார் 20,000 பேர் பங்கேற்றனர்.

Follow us on : click here

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilan