மலேசியாவில் மூன்று பேரை கொன்ற புலி!! புலிகளை கூண்டோட பிடிக்க தீவிரம்!!

மலேசியாவின் வடகிழக்கு மாநிலமான Kelantan-ல் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் புலியால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து புலிகளை பொறிவைத்து பிடித்து, இடமாற்றம் செய்ய தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகளை பிடிக்க அப்பகுதியில் 11 கூண்டுகள் மற்றும் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் கூண்டுகளுக்கு அருகில் உயிருள்ள ஆடுகளை கட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் இருந்து 5 பேரை புலி தாக்கியுள்ளது.அதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மலாய புலி மலேசியாவின் தேசிய விலங்காகக் கருதப்படுகிறது.

மேலும் இவை அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகும்.

கிட்டத்தட்ட 3000 புலிகள் 1950-ஆம் ஆண்டுகளில் மலேசிய காடுகளில் சுற்றித் திரிந்தது என்று கூறினர்.

ஆனால் தற்போது காடுகளில் 150 க்கும் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அவற்றுள் Kelantan பகுதியில் மட்டும் 35 புலிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலி மனிதர்களை தாக்குவது அரிது என்றும், இது போன்ற தாக்குதல்கள் எப்போது நடக்கும் என்றால்,அவற்றின் வாழ்விடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போது நடப்பதாக அவர்கள் கூறினர்.