பெருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை மம்மி கண்டுபிடிப்பு!!

நவம்பர் 20ஆம் தேதி அன்று தென் அமெரிக்காவின் மேற்கத்திய நாடான பெருவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தைகளின் மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் கூற்றுப்படி இந்த மம்மிகள் 900AD முதல் 1450AD வரை வாழ்ந்த Inca Ychsma கலாச்சாரத்தை சேர்ந்தவை ஆகும்.

இந்த மம்மிகளின் மண்டை ஓடுகளில் இன்னும் முடி இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறினார்.

மேலும் இந்த மம்மிகளை கண்டெடுத்த இடத்தில் 3500 ஆண்டுகள் பழமையான கோவில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Ychsma காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த இடத்தை புனிதமான இடமாகக் கருதியதால் இறந்தவர்களை இங்கே புதைத்ததாக தெரிவிக்கப்பட்டது.